அதிக இரத்த அழுத்தம் பக்கவாதத்தை ஏற்படுத்துமா? ஆம் !

உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான காரணமாகக் கூறப்படும் முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும் (மாரடைப்பு போன்றவை).

இந்த செய்தி கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட 2017 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி , எட்டு இந்தியர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார், இது சுமார் 207 மில்லியன் மக்களுக்கு பாதிப்பை தருகின்றது.

மேலும், அதில் கூறியது போல், உயர் இரத்த அழுத்தம் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.63 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்ததாக குளோபல் பர்டன் ஆஃப் டிஸீஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கோள் காட்டி, இந்தியாவில் 57% பக்கவாதம் மற்றும் 24% கரோனரி இதய நோய் இறப்புகளுக்கு உயர் இரத்த அழுத்தம் காரணம் என்று கூறுகிறது.

ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வழக்கமாக அதன் அளவை கண்காணித்து கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

உங்கள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சில எளிய உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:

  • டிஜிட்டல் பிபி மானிட்டரைப் பெற்று, அதைப் தவறாமல் பயன்படுத்தவும்.
  • வருடத்திற்கு ஒரு முறையாவது, சிறந்த நிபுணரிடம் முழுமையான உடல் சுகாதார பரிசோதனை செய்யுங்கள்.
  • பிபி 180/120 mm Hgக்கு மேல் இருந்தால், உடனடியாக விரைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் / அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  •   தலைச்சுற்றல், தலைவலி அல்லது தலையில் துடிக்கும் உணர்வு போன்ற அறிகுறிகள் இரத்த அழுத்த பிரச்சனையின் காரணமாக இருக்கலாம் (குறைந்த அல்லது அதிக).
  • சோடியம் (உப்பு) மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ள சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சேர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவு / பானங்களைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
  •  தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். வாரத்திற்கு குறைந்தது 4-5 முறை, சுமார் 30-45 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடக்கவும்.
  •  புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முழுமையாக விட்டுவிடுங்கள்.
  •  உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், தியானம், யோகா போன்ற பல்வேறு வழிகளில் அதைக் குறைக்க முயற்சிக்கவும்.
  • மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

  உங்கள் மருத்துவர் உங்கள் நிலையின் அடிப்படையில் இன்னும் பல வழிமுறைகளை உங்களுக்கு அறிவுறுத்த முடியும், எனவே அவரை அணுகவும்.

சுருக்கமாக, பக்கவாதம் உள்ளிட்ட நிறைய உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்.

தமிழ் மொழிபெயர்ப்புக்கு எங்கள் வாட்ஸ்அப் குழு உறுப்பினர் மைதிலி பத்மநாபனுக்கு மிக்க நன்றி!

If you have limited/No information about Stroke, its symptoms and consequences, we STRONGLY suggest you read at least one of the following before you leave this Website, as well as share the links with your friends and family. You may save someone from sudden death or being crippled for life !
* Be fast – Stroke Symptoms in English with Videos of Actual Strokes

* स्ट्रोक (आघात) – हिंदी में कुछ जानकारी
* स्ट्रोक-के-साधारण-लक्षण
* In Gujarati – જ્યારે સ્ટ્રોક આવે ત્યારે BE FAST
* In Bengali – Be Fast – দ্রুত !
* In Odiya – ଷ୍ଟ୍ରୋକ: ମୃତ୍ୟୁ ଅଥବା ଶାରୀରିକ/ମାନସିକ ଅସମର୍ଥ

Join other Stroke Survivors, Caregivers and equipment/service providers for help, encouragement , knowledge sharing and most importantly – hope – via:
** Telegram Global Stroke Support Group : https://t.me/strokesupportgroup
** Whatsapp Group: https://strokesupport.in/contact/
ALL other means to connect with us, including Social Media Groups and Channels on Telegram, LinkedIn, Facebook ( in many local Indian Languages) , Twitter, Instagram, Pinterest and YouTube ; as well as means of Volunteering, giving Feedback, sharing your inputs etc. may all be found at :
https://strokesupport.in/connect/
Please DO have a look and join in wherever convenient as well as share.
Thank you VERY MUCH !

Leave a Reply